தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து தொடர்பாக....

தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள்.

Published On :

அரக்கோணம் ரயில் நிலைய ஆறாவது நடைமேடை அருகே சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரக்கோணம் பணிமனையில் இருந்து கார் ஏற்றி வரச் சென்ற சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரக்கோணம் வழியாக சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அரக்கோணம் நார்த் கேபின் என்ற இடத்தின் அருகில் இந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Story image

இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பத்தூரில் 40 நிமிடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும், சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மின்சார ரயில்கள் திருவள்ளூருடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அப்படியே சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தடம் புரண்ட சரக்கு ரயிலை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.