இந்தியர்கள் பிலிப்பின்ஸ் செல்ல விசா தேவையில்லை: முழு விவரம்!

பிலிப்பின்ஸ் வழங்கியுள்ள விசா சலுகைகள் குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்காக இரண்டு விதமான விசா சலுகைகளை பிலிப்பின்ஸ் அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்த சலுகைகளை புதுதில்லியில் உள்ள பிலிப்பின்ஸ் தூதரகம் அறிவித்தது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் இந்தியா - பிலிப்பின்ஸ் இடையேயான கலாசார உறவுகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று தெரிவித்தது.

14 நாள்கள் தங்கும் விசா அல்லது 30 நாள் தங்கும் விசா என இரு சலுகைகளை வழங்கியுள்ளது. எதைத் தேர்வுசெய்தாலும், அல்லது இ-விசா முறையைப் பயன்படுத்தினாலும், இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த தென்கிழக்கு ஆசிய நாட்டுக்குள், மிகவும் நேர்த்தியான, வரவேற்கத்தக்க நுழைவு செயல்முறையை அனுபவிக்கலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்திய குடிமக்கள் 14 நாள்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். இந்தச் சலுகை சுற்றுலாவுக்காக மட்டுமே, இதை நீட்டிக்க முடியாது, வேறு விதமான விசாவாகவும் மாற்ற முடியாது.

பிரதான சர்வதேச விமான நிலையங்கள், இரண்டாம் சர்வதேச மையங்கள், துறைமுகம் ஆகியவற்றின் வழியாக சுற்றுலாப் பயணிகள் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு வரலாம்.

14 நாள் விசா

* சுற்றுலாவுக்காக மட்டும் இருக்க வேண்டும்

* தங்குவதற்கு திட்டமிட்ட காலத்தில் இருந்து குறைந்தது 6 மாதங்கள் கடவுச்சீட்டு செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.

* உணவகங்கள், தங்குமிடம் ஆகியவற்றுக்கான முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

* தங்கியிருக்கும்போது செலவுகளை சமாளிப்பதற்கு போதுமான பணம் இருப்பதற்கான சான்றாக சமீபத்திய வங்கி அறிக்கைகள் அல்லது வேலைவாய்ப்பு சான்றிதழ் இருக்க வேண்டும்.

* திரும்ப செல்வதற்கான டிக்கெட்(Retrun Ticket) உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

* பிலிப்பின்ஸ் குடிவரவு அதிகாரிகளால் எவ்விதமான குற்றப் பின்னணி பதிவும் இருக்கக் கூடாது.

பிலிப்பின்ஸ் அறிமுகப்படுத்திய 14 நாள் விசாவை சுற்றுலா செல்வதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

30 நாள் விசா

14 விசாவுக்கு கூடுதலாக செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருக்கும் இந்தியர்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஷெங்கன் பகுதி நாடுகள், இங்கிலாந்து நாடுகளில் பெறப்பட்ட நிரந்தரக் குடியிருப்பு அனுமதியை வைத்திருப்போர் 30 நாள்கள் விசா இல்லாமல் பிலிப்பின்ஸில் தங்கலாம்.

இதற்கு 14 நாள்கள் இருப்பதற்கான அனைத்து ஆவணங்கள், கூடுதலாக நிரந்தர குடியிருப்பு அனுமதி தேவை.

இ - விசா

14 நாள், 30 நாள் விசா சலுகைகளைப் பயன்படுத்த முடியாத இந்தியர்களுக்கு இ - விசாக்களை பிலிப்பைன்ஸ் வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com