
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக இருந்தது என்று சுபமின் உறவினர் சௌரப் திவேதி தெரிவித்தார். மோடியைச் சந்தித்தபோது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அழத் தொடங்கினர் என்று அவர் மேலும் கூறினார்.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட சுபம் திவேதி விடுமுறையையொட்டி பஹல்காம் சென்றபோது பயங்கரவாதத் தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் கடந்த வாரம் மே 10 முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.