ராகுல் காந்தி எப்போதும் உண்மையையே பேசுவார்: பிரியங்கா

வாக்குத் திருட்டு மூலம் பிகாரில் ஆட்சி அமைக்க என்டிஏ விரும்புகிறது..
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திPTI
Published on
Updated on
1 min read

வாக்குத் திருட்டு மூலம் பிகாரில் என்டிஏ அரசு ஆட்சி அமைக்க விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகி நகர், சன்பதியாவில் தொடர்ச்சியான பேரணிகளில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறுகையில்,

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலம் பெண்கள் உள்பட 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 20 ஆண்டுக்கால ஆட்சியால் மக்கள் சலித்துவிட்டதால், அந்த கட்சி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலைமை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தைப் போன்றது என்றும், எதிர்காலத்தில் நாடு தொடர்ந்து தேர்தல்களைக் காணுமா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

ஹரியாணாவில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து என் சகோதரர் ராகுல் இன்று ஒரு அறிக்கை அளித்தார். 2024ஆம் ஆண்டு ஹரியாணாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்தையும் அழித்துவிடும். மக்களாகிய நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? அவர்களை அதிகாரத்திலிருந்து விரட்டுங்கள்.

பிகார் இளைஞர்களை விட ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் எதிர்காலம் குறித்து என்டிஏ அதிக அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்று கேலி செய்தார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகார் மக்கள் ரூ. 25 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவார்கள். ஏழைக் குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்புவோம் என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் அமைக்கப்படுவதாகவும், அவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கார்ப்பரேட்டுகளுக்கு நிலத்தையும் வளங்களையும் ஒப்படைப்பவர்கள் ஒருபோதும் ஏழைகளுக்காகச் செய்ய மாட்டார்கள்.

ஹரியாணா தேர்தலில் மோசடி நடந்தது எப்படி என ராகுல் காந்தி விளக்கி உள்ளார். ராணுவத்தை அவமதிக்கும் எந்த கருத்தையும் ராகுல் கூறவில்லை ராணுவ நலனையே விரும்புகிறார். வாக்குத் திருட்டு விவகாரத்தை ராகுல் நிறுத்தப்போவதில்லை, அவர் எப்போதும் உண்மையையே பேசுவார்.

பிகாரில் தேர்தல் நியமாக நடைபெறாவிட்டால் மற்ற மாநிலங்களில் பாஜக செய்ததை பிகாரிலும் செய்ததாக அர்த்தம் இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

Summary

Congress leader Priyanka Gandhi Vadra on Wednesday alleged that the NDA wants to form the government in Bihar through 'vote chori'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com