

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் நவ.8 முதல் நவ.11 ஆம் தேதி வரை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தப் பயணத்தில், அங்கோலா அதிபர் ஜோவோ லூரென்கோவை சந்திக்கும் அவர், நவ.11 ஆம் தேதி நடைபெறும் அந்நாட்டின் சுதந்திர நாள் விழாவில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நாட்டின் அதிபர் டுமா கிடியோன் போகோவின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் நவ.11 ஆம் தேதி போட்ஸ்வானா செல்கின்றார்.
பின்னர், நவ.13 ஆம் தேதி வரையிலான போட்ஸ்வானா பயணத்தில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், முதலீடுகள், விவசாயம், மருத்துவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் பயணத்தில் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களைச் சந்திக்கும் குடியரசுத் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் - பாஜக எம்.பி. கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.