

மெலிஸா புயலால் பாதிக்கப்பட்ட கியூபா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு தலா 20 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான மெலிஸா புயல் ஜமைக்கா, கியூபா, உள்ளிட்ட நாடுகளில் கரையைக் கடந்தது.
வரலாற்றில் மாபெரும் சக்திவாய்ந்த புயலாக அறியப்படும் மெலிஸா புயலால், கரீபியன் பகுதியில் உள்ள நாடுகள் பலத்த பொருள் மற்றும் உயிர் சேதங்களைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில், மெலிஸா புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான ஜமைக்கா மற்றும் கியூபாவுக்கு, இந்தியா சார்பில் தலா 20 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதில், மருந்துகள், மின்சார ஜெனரேட்டர்கள், தற்காலிக கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சிறப்பு விமானங்கள் மூலம் அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவாணா மற்றும் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் ஆகிய நகரங்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் அனைத்தும் நேற்று (நவ. 6) சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:நிம்மதியாக ஓய்வுபெற முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பிரியங்கா காந்தி மிரட்டல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.