தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் நடந்தது என்ன? ஆணையர் விளக்கம்

விபத்து நடந்த இடத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு
வெடித்துச் சிதறி எரியும் கார் / காவல் ஆணையர்
வெடித்துச் சிதறி எரியும் கார் / காவல் ஆணையர் படம் - பிடிஐ / ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்துச் சிதறிய விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஆணையர் சதீஷ் கோல்சா விளக்கம் அளித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு சதீஷ் கோல்சா பேசியதாவது,

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே முதலில் வெடித்தது மாருதி ஈகோ கார். பல நபர்கள்பயணித்த வாகனத்தில் வெடிவிபத்து நடந்துள்ளதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது.

கார் மெதுவாக பயணித்து வந்தபோது வெடித்துள்ளது. இதனால், அருகில் இருந்த மற்ற கார்கள், ஆட்டோக்களிலும் தீ பரவி விபத்து பெரிதாகியுள்ளது. மாலை 6.52 மணியளவில் கார் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விசாரணைக்குப் பிறகு மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

கார் வெடித்துச் சிதறிய இடத்தில் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயர்தர வெடிப்பொருள் வெடித்திருந்தால் சம்பவ இடத்தில் பள்ளம் உருவாகியிருக்கும் என்றும் ஆனால், கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்தில் பள்ளம் ஏதும் உருவாகவில்லை எனத் தெரியவந்துள்ளது.

வெடிப்பொருள் சிதறல்களால் ஏற்படும் காயங்களோ, அதன் அறிகுறிகளோ காயமடைந்தவர்களிடம் இல்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது. எனினும், வெடித்துச் சிதறிய காரில் பயணிகள் இருந்துள்ளதாக காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளதால், பயங்கரவாத தாக்குதல் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: 10 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?

Summary

Blast near Red Fort Metro station Delhi Police Commissioner Satish Golcha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com