கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்த அமித் ஷா!
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே இன்று மாலை கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதனால், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் விபத்தையடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்தோரை சந்தித்த அமித் ஷா, விபத்து நடந்த இடத்தை அடுத்ததாகப் பார்வையிடவுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக காவல் துறை ஆணையர் சதீஷ் கோல்சாவிடம் கேட்டறிந்தார்.
தில்லியின் முக்கிய நகரங்களில் ரயில்வே காவல் துறையினர் மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தில்லி நகரின் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்துப் பணிகள் மட்டுமின்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: 10 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?
delhi Car blast Amit Shah meets the injured
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

