

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவால் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ் தூக்கத்தை இழந்துள்ளதாக பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
வாக்காளர் எண்ணிக்கையின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர் தேஜஸ்வி, ராகுலை யாரும் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஒவ்வொரு மணி நேரமும் வாக்காளர் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக சாதனை படைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. எனவே இயற்கையாகவே, ராகுலும், தேஜஸ்வியும் தூக்கத்தை இழக்கிறார்கள். அதிகாரம் அவர்கள் கைகளிலிருந்து நழுவியதை அவர்கள் அறிவார்கள்.
மத்திய அரசுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இடையே தொடர்பு இருப்பதாக ராகுலின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக தலைவர், ஊடுருவல்காரர்களிடம் பிறப்புச் சான்றிதழ் கேட்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.
இறந்த 18 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், நகல் பெயர்களை நீக்குதல் மற்றும் ஊடுருவல்காரர்களிடமிருந்து பிறப்புச் சான்று கோருதல் ஆகியவை வாக்கு வங்கி காரணமாக ராகுலுக்குப் பிடிக்காத ஒன்று. வாக்குத் திருட்டு குறித்து ராகுலின் பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் போலியானவை மற்றும் பொய்யானவை. அவருக்கு பொது அறிவு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
முதல் கட்டத் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகின்றன. ஆண், பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதத்தைத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இந்த புள்ளிவிவரங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன? என்று தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார். இவ்வாறு தேஜஸ்வி கோரியதைத் தொடர்ந்து பாஜக எம்பி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவுக்குப் பிறகு, பிகாரில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.