

மேக்கேதாட்டு அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தின், தெற்கு பெங்களூரு மாவட்டத்தில் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் மீது அணை கட்டப்பட வேண்டும் எனும் முயற்சியை மீண்டும் தொடங்கும் நடவடிக்கையாக, மைசூரில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் நிகழாண்டில் (2025) அதிகளவில் மழை பெய்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. அளவிலான தண்ணீர் மட்டுமே திறக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் கூடுதலாக 150 டி.எம்.சி. தண்ணீர் திறந்துள்ளோம். இது, இரண்டு மடங்கு அதிகம்.
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. நாம் இந்தமுறை அவர்களுக்கு அதிகளவிலான தண்ணீரை திறந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் மீது மேக்கேதாட்டு அணையானது கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீர் பகிர்வு கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெடிச் சத்தம்... பரபரப்பு.. களேபரம்.! யூடியூபரின் கேமராவில் பதிவான தில்லி கார் விபத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.