

கனடா நாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
கனடாவில், ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஜி7 கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை இன்று (நவ. 12) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கடந்த நவ.11 ஆம் தேதி கனடா, மெக்சிகோ, பிரான்ஸ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.