

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் அரசு, 8 சிவிங்கிப்புலிகளை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசு முறைப் பயணமாக அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், அந்நாடுகளின் முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், போட்ஸ்வானாவின் மொகோலோடி தேசிய பூங்காவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்திய அதிகாரிகளிடம் இன்று (நவ. 13) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் போட்ஸ்வானா அதிபர் டுமா கிடியோன் போகோ ஆகியோர் பங்கேற்றனர்.
இதுபற்றி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறுகையில், இந்த சிவிங்கிப்புலிகள் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரிசளிக்கப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளும் போட்ஸ்வானாவிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வரும் வாரங்களில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு நமிபியா நாட்டில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், தற்போது இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு காது கேளாமை பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.