

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அவர்களில் 8 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிலும், 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), 4 பேர் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் அதிர்ச்சி சிகிச்சை மையத்திலும் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் காது கேளாமை, காதுகளில் வலி, கை கால்களில் வீக்கம், சிராய்ப்பு காரணங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத தண்டனை! அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.