

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ‘சாலுமரதா’ திம்மக்கா 114 வயதில் காலமானார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான ‘சாலுமரதா’ திம்மக்கா, வயது மூப்பினால் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திம்மக்கா இன்று (நவ. 14) காலை காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சாலுமரதா திம்மக்காவின் மறைவிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1911 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பிறந்த திம்மக்கா, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் சுமார் 4.5 கி.மீ. தொலைவிற்கு 385 ஆலமரங்களை நட்டு “சாலுமரதா” எனும் புகழை அடைந்தார்.
மேலும், தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ள திம்மக்காவின் பணிகளுக்காக, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல்வர் வேட்பாளர் தேஜஸ்விக்கு 8,500 வாக்குகள் பின்னடைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.