

தில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய மருத்துவர் உமர் நபியின் வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் பயங்கரவாதத் தாக்குதல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியவர் ஃபரிதாபாத்தில் பணிபுரியும் மருத்துவர் உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் உமர் நபியில் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.
இதற்கு முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.