காற்று மாசுபாட்டால் கேள்விக்குறியான தில்லி குழந்தைகள் உடல்நிலை!

தில்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் பெரும் பாதிப்பின் விளிம்பு நிலையில் இருப்பதாக ஆய்வில் தகவல்
கோப்புப் படம்
கோப்புப் படம்ENS
Published on
Updated on
1 min read

தில்லியில் நாளுக்குநாள் காற்றின் தரம் மோசமாகி வரும்நிலையில், தில்லி குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

உலகின் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. தில்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவதால், ஜென் ஆல்ஃபா குழந்தைகளுக்கு வரும் காலங்களில் முன்கூட்டிய இறப்பு, எளிதில் நோய்ப்படுதல், கற்றல் திறனின்மை பாதிப்புகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன.

தில்லியில் சமீபத்திய ஆண்டுகளாகவே காற்றின் தரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த குழந்தையே இதுவரையில் சுமார் 800 நாள்கள் வரையில் மோசமான காற்றை சுவாசித்து வந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால், இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.

மாசுபட்ட காற்றால், குழந்தைகள் நினைவுத் திறன், கற்றல் திறன், கவனமும் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளிடையே ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

தில்லி பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலை பிரார்த்தனைகளை இருமலுடன் தொடங்குவது பெருந்துயரம்.

இதையும் படிக்க: பிகாரின் நீண்ட கால முதல்வர் நிதீஷ் குமார்! ஆனால், 20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதது ஏன்?

Summary

Worst AQI: Delhi kids may die earlier, be dumber, get sicker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com