

கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கே. பத்மராஜனுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலத்தாயி கிராமத்தில் 2020 ஆம் ஆண்டில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியரும் பாஜக பிரமுகருமான கே. பத்மராஜனுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை அளித்து போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக, குழந்தையின் தாயார் குழந்தைகள் நல உதவிமையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, 2020 மார்ச் மாதத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு 40 பேர் சாட்சியங்களாகவும், 14 பொருள் ஆதாரங்களுடன் 77 ஆவணங்களும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 முறை விசாரணைக் குழு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கே. பத்மராஜன் மீது இரண்டு போக்சோ பிரிவுகளின்கீழ் 40 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனையும், ஐபிசியின்கீழ் மரணம் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிக்க: பழங்குடியினரை அங்கீகரிக்கத் தவறிய காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.