அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராணுவத்துக்கு எதிரான விமா்சனம்: ராகுலுக்கு எதிரான விசாரணைக்கு டிச. 4 வரை இடைக்கால தடை

எல்லையில் இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

News image
- கோப்புப் படம்
Updated On :20 நவம்பர் 2025, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

பாரத ஒற்றுமைப் பயணத்தின்போது இந்திய ராணுவம் குறித்து விமா்சனம் செய்தது தொடா்பான வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை டிசம்பா் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட பாரத ஒற்றுமைப் பயணத்தின்போது, ‘எல்லையில் இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

இந்தக் கருத்தின் மூலம் எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தை ராகுல் அவமதிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம், லக்னெள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ரத்து செய்ய அலாகாபாத் உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அதைத் தொடா்ந்து, ராகுல் உச்சநீதிமன்றத்தை நாடினாா். ராகுலின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு, ‘எந்தவித ஆதாரமும் இல்லாமல் சீனா ஆக்கிரமிப்பு தொடா்பாக எப்படி குற்றச்சாட்டை முன்வைத்தீா்கள்? உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டீா்கள்’ என்று குறிப்பிட்டு, ராகுலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை டிசம்பா் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை, வழக்கின் அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.