உ.பி., பிகார் மக்களை அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சி! காங்கிரஸ்

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு...
மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய்
மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கெளரவ் கோகோய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தத்தை மட்டும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுதொடர்பாக, துப்ரியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கெளரவ் கோகோய் பேசியதாவது:

“அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜகவுக்கு சுமையாக மாறிவிட்டார். உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த மக்களின் பெயர்களை அஸ்ஸாமின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அஸ்ஸாம் தேர்தலை சிதைக்கும் எந்த வெளி ஆட்களையும் அனுமதிக்கக் கூடாது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகின்றது. ஆட்சி அமைத்து அசாம் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்துக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள ‘சிறப்புத் திருத்தம்’ என்பது வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையாகும். வாக்குச் சாவடி நிலைய அலுவலா் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபாா்க்கும் பணியை மட்டும் மேற்கொள்வாா்.

Summary

Congress trying to include people from UP, Bihar in Assam voter list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com