
இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரையிலான காலகட்டத்தில் மாணவர் தற்கொலைகள் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளன. இது தற்கொலை இறப்புகளில் மாணவர்கள்தான் அதிகம். மன அழுத்தம், கல்விச் சுமை, சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களால்தான் பெரும்பாலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர்.
2013-ல் 8,423 ஆக இருந்த மாணவர் தற்கொலைகள், 2023-ல் 13,892 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, 2019 - 2023 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கல்வியில் போட்டி, வேலையின்மை அச்சம், குடும்ப அழுத்தம், நிதி நெருக்கடி, மனதளவில் வலுவின்மை ஆகியவைதான் தற்கொலைக்குக் காரணம் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயிற்சிபெற்ற மனநல ஆலோசகர்கள், உதவி எண்கள், மனநல ஆலோசனை மையம் ஆகியவற்றை பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும். மதிப்பெண்கள் குறைந்தால், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த போதிய அறிவுரையும் ஆதரவும் வழங்க வேண்டும்.
உடற்பயிற்சி, பொழுதுபோக்குகள், நினைவாற்றல் மற்றும் சரியான தூக்கம் போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிப்பதும் தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்தன்மையை வலுப்படுத்துகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.