தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

தில்லியில் நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளின் பயிற்சியாளர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து..
கோப்புப் படம்
கோப்புப் படம்TNIE
Published on
Updated on
1 min read

தில்லியில், ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடலில், தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளின் பயிற்சியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடலில், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டுள்ளன.

இந்த நிலையில், கென்யா நாட்டு அணியின் பயிற்சியாளர் டென்னிஸ் மராகியா இன்று (அக். 3) வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் அணியின் பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சூ என்பவரையும் தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பயிற்சியாளர்கள் இருவருக்கும் திடலிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனால், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திடல் வளாகத்தில் 2 நாய் பிடிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

Summary

In Delhi, at the Jawaharlal Nehru Stadium, two coaches from Japan and Kenya suffered serious injuries after being attacked by a stray dog.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com