
மணிப்பூரில் கடந்த சில நாள்களாக பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர், தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தளபதி மற்றும் சூரசந்த்பூர் மாவட்ட காடுகளிலிருந்து 5 தீவிரவாதிகளைக் கைது செய்ததாக துணை ராணுவப் படை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆபரேஷன் சாங்கோட் என்ற பெயரில் அக்டோபர் 1ல் யுனைடெட் குக்கி தேசிய ராணுவத்தின் மூத்த தளபதி எஸ்எஸ் லெப்டினன்ட் ஜாம்கோகின் கைட் லூபோ மற்றும் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை தௌபல் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களிலிருந்து நான்கு தீவிரவாதிகளைக் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (அபுன்பா)-வைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 தீவிரவாதிகளை தௌபல் வாங்கேமில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2023ல் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தங்கம் விலை உயா்வு ஏன்? ரிசா்வ் வங்கி ஆளுநா் விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.