நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்குரைஞர் இடைநீக்கம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
பி.ஆர். கவாய் - கோப்புப் படம்
Updated On :6 அக்டோபர் 2025, 4:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு முரணாக நடந்துகொண்டதாலும், வழக்குரைஞர்களுக்கான சட்டத்தை மீறிய செயலில் ஈடுபட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனால் இனி எந்தவொரு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகவோ, வாதிடவோ கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இத்துடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பார் கவுன்சில், இந்த இடைநீக்கம் தொடரக் கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துடன் முரண்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி அவரைத் தாக்க முற்பட்டுள்ளார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு வழக்குரைஞரை தடுத்து நிறுத்தி, அவரை வெளியே அழைத்துச் சென்றனர். மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் வழக்குரைஞரை கைது செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் கஜூராஹோ கோவிலில் கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை சரி செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், தலைமை நீதிபதி கூறிய கருத்துகள் சநாதனத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும், சநாதனத்தை அவமதிப்பதை பொருத்துக்கொள்ள முடியாது என்பதால் தாக்க முற்பட்டதாக வழக்குரைஞர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தில்லியிலுள்ள மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர். உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினராக உள்ள இவர், ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என காவல் துறை விசாரணையின் தெரியவந்துள்ளது.

summary

advocate hurled a shoe at the CJI B R Gavai, advocate suspended

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.