பிகார் தேர்தல்: நவ. 6, 11 - இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்Photo : Youtube / ECI
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குகள் நவ. 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிகாரில் கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டு புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் ஞானேஷ் குமார் பேசியதாவது:

”பிகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில், 2 எஸ்.டி., 38 எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும். ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 1,725 என மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

243 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என தேர்தல் பணிக்காக மொத்தம் 8.5 லட்சம் பேர் பணிபுரியவுள்ளனர்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. நவம்பர் 6 முதல் கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 11 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்டத் தேர்தலுக்கு நவ. 10 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு நவ. 13 ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. முறையே, நவ. 17, 20 வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

நவம்பர் 14 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Photo : ECI
Summary

Bihar Elections: Voting in two phases on Nov. 6 and 11!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com