
பிகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில், சுமார் 8.5 லட்சம் தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் நவம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சுமார் 243 தொகுதிகளில், 2 கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலானது, வரும் நவம்பர் 6 ஆம் தேதியன்று தொடங்குகின்றது.
பிகாரில், வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதற்கட்டமாக 121 சட்டமன்றத் தொகுதிகளிலும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று; தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பணிகளில் சுமார் 8.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேரள சட்டப்பேரவையில் அமளி! 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.