மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

நாட்டிற்கு மாற்று கல்வி முறையும் உற்பத்தி முறையும் தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி
மாணவர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி படம் - காங்கிரஸ்
Updated on
1 min read

நாட்டிற்கு மாற்று கல்வி முறையும் உற்பத்தி முறையும் தேவை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது ஒருசிலருக்கு சலுகையாகிவிடக் கூடாது என்றும், ஜனநாயக அமைப்பில் செழித்து வளரும் உற்பத்தி முறை தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெருவில் உள்ள போன்டிஃபிஷியல் கத்தோலிக்க பல்கலைக் கழகம் மற்றும் சிலி பல்கலைக் கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, இந்திய கல்வி முறை மற்றும் உற்பத்தி குறித்து உரையாற்றினார்.

மாணவர்களுடன் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளதாவது, ''ஜனநாயக அமைப்பை செழித்திடச் செய்யும் வகையிலான மாற்று உற்பத்தி முறை இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. பெரு மற்றும் அமெரிக்கா உடனான கூட்டு ஒத்துழைப்பு, இதில் முன்னோக்கிச் செல்ல உதவுகிறது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், ''கல்வி என்று வரும்போது, அரசியல் ரீதியாகவும் சரி, சமுக ரீதியாகவும் சரி ஆர்வம் மற்றும் சுதந்திரமாக, எந்தவித கட்டுப்பாடு அல்லது அச்சம் இல்லாமல் கேள்வி கேட்பது, விரிவாக சிந்திப்பதிலும் இருந்து தொடங்குகிறது.

சுதந்திரத்தின் அடிப்படை கல்வி. இது சிலருக்கு சலுகையாக மாறிவிடக்கூடாது. அறிவியல் மனப்பான்மை, கூரிய சிந்தனையை ஊக்குவிப்பது மற்றும் நாட்டின் பரந்துபட்ட பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலான கூறுகளை உள்ளடக்கிய கல்வி முறை இந்தியாவுக்குத் தேவை'' என ராகுல் காந்தி பேசியதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பலமுனை தரப்பட்ட உலகமாக மாறிவிட்ட சூழலில் ஜனநாயகம், சுற்றுச்சூழல் என இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்லத் தேவையானவற்றை குறித்தும் உரையாடியதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்க | இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!

Summary

Education must not become privilege for a few: Rahul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com