
தில்லியில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று (அக். 16) நேரில் சந்தித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, பாஜகவை அறிந்துக்கொள்ளுங்கள் (க்னோ பிஜேபி) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லியில் பிரிட்டன் அரசின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கை, இன்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், பாஜகவின் அமைப்பு சார்ந்த பலம், அரசியல் அனுகுமுறைகள் குறித்து சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிடம் இது குறித்த உரையாடல்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த அக்.14 ஆம் தேதி, தில்லி வந்திருந்த மங்கோலியாவின் அதிபர் குரேல்சுக் உக்னாவை, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் படித்த கல்லூரிக்கு நேரில் சென்ற இலங்கை பிரதமர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.