
பாஜக தலைவரும் பாட்டியாலா முன்னாள் மேயருமான சஞ்சீவ் சர்மா பிட்டு ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
தலைநகர் தில்லியில் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் அவர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆட்சியின்போது பாட்டியாலா மேயராக சஞ்சீவ் சர்மா பதவி வகித்தார்.
பாட்டியாலா நகராட்சித் தேர்தலின் போது நகராட்சி கவுன்சிலராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் மேயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், பாட்டியாலாவின் முன்னாள் மேயரான சஞ்சீவ் சர்மா, இன்று காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் அகில இந்திய காங்கிரஸில் இணைந்தார் என்று தெரிவித்துள்ளது.
சஞ்சீவ் சர்மா 2022 பஞ்சாப் தேர்தலில் பாட்டியாலா கிராமப்புற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பல்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.