
தில்லியில், தீபாவளி பண்டிகை நாளான நேற்று (அக். 20) மட்டும் சுமார் 170-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்ததாக, தில்லி தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், தலைநகர் தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது.
இந்த நிலையில், தில்லி தீயணைப்பு படையினருக்கு நேற்று காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் அவசர அழைப்பு வந்ததாகவும்; அதையடுத்து, வரிசையாகப் பல்வேறு இடங்களில் இருந்து உதவிக்கு அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், தில்லியின் நரேலா பகுதியில் உள்ள காலணி (ஷூ) தொழிற்சாலையில், நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 16 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அந்த தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதேபோல், போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள அட்டை தொழிற்சாலையிலும் ஏற்பட்ட தீயை, சுமார் 26 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.