
தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளர் என்றால் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பாஜக எம்.பி. பிரிஜ் லால் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இன்று அறிவித்தார்.
மேலும், துணை முதல்வர் வேட்பாளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் (மக்கள் மேம்பாட்டுக் கட்சி) தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக எம்.பி. பிரிஜ் லால் பேசியதாவது,
''பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்தான் என்றால் அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தேஜஸ்வியின் முகமும் உள்ளது.
அதனை முதன்மையாக்கி பாஜக பிரசாரம் செய்யும். பிகாரில் இருந்து ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட இந்தியா கூட்டணி முழுவதுமாக துடைத்தெறியப்படும். பிகாரில் யாரும் ஜங்கிள் ராஜ் மீண்டும் வருவதற்கு விரும்பமாட்டார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பேசியதாவது,
''சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியது கட்டாயம். முதலில் நாங்கள் வெற்றியை பதிவு செய்கிறோம். இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி வெளியிட்டனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வாறு செய்ததா? தற்போதுவரை முதல்வர் முகம் அங்கு இல்லை?'' என பதிலளித்துப் பேசினார்.
இதையும் படிக்க | பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.