

சிக்கிமின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கேங்டாக்கில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
மேற்கு பாயிண்ட் மாலில் அமைந்துள்ள மூன்று திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கை மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அருண் உப்ரீட்டி மற்றும் கேங்டாக் எம்எல்ஏ டிலே நம்க்யால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நவீன வசதிகளுடன் கூடிய மூன்று அரங்குகளில் மொத்தம் 482 இருக்கைகள் உள்ளன.
பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அஜய் பிஜ்லி கூறுகையில், "சிக்கிம் மக்களுக்கு உலகத் தரத்திலான பொழுதுபோக்கைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.