

மொந்தா புயல் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தற்போது, வங்கக் கடலில், நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் இது புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் சின்னத்துக்கு மொந்தா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், மொந்தா புயல் தொடர்பான தகவலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மொந்தா புயலால் மழைக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு 1: புயல் சின்னம் வட தமிழகத்தின் நிலபரப்புக்கு வாராமல், கடலிலேயே ஆந்திரத்துக்கு செல்லும் பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கனமழையைத் தவறவிடும், சாதாரண மழை மட்டுமே கிடைக்கும்.
வாய்ப்பு 2: வட தமிழக கடற்கரைக்கு அருகில் வந்து, ஆந்திரத்துக்கு வளைந்து செல்லும்போது - சென்னையில் மட்டும் கனமழை பெய்யும்.
சென்னை மாவட்டம் மழையைத் தவறிவிடப்போகிறதா? அல்லது இந்தப் புயல் சின்னத்தால் நாம் ஏதாவது பெறப் போகிறோமா? என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் நமக்கு தெளிவு கிடைக்கும்.
இந்தப் புயல் ஆந்திராவுக்கு நகர்ந்த பிறகு என்ன நடக்கும்
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு முன்பு தமிழ்நாட்டில் நிறைய மழை பெய்யும். நவம்பர் முதல் வாரம் பருவமழையின் தீவிரம் குறைவாக இருக்கும்.
வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அக். 25 முதல் 28 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் ”என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.