

சென்னை: வங்கக் கடலில் உருவாகவிருக்கும் வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலுக்கு மொந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இந்த வார துவக்கத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வந்தது. இது மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வலுவிழந்து தடயமே இல்லாமல் மறைந்து போனது. ஒருவேளை, இது புயலாக மாறும் வாய்ப்பிருந்திருந்தால், இதற்கு மொந்தா என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது நிலப்பரப்புக்கு அருகே உருவாகியிருந்ததால், மண்டலமாக வலுப்பெறாமல், மறைந்து போயிருந்தது.
தற்போது, வங்கக் கடலில், நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் இது புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த புயல் சின்னத்துக்கு மொந்தா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு, பெயரிடும் முறை பல காலமாக இருந்து வருகிறது. கப்பலில் செல்பவர்களுக்கு விரைவாக தகவல் சென்றடைய வேண்டும், எந்தக் குழப்பமும் ஏற்படக் கூடாது, குறியீடுகளால் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தால் பெயர்கள் சூட்டப்படுகிறது.
முக்கிய கடல் பகுதிகளைப் பகிர்ந்துகொள்ளும் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஏமன் உள்ளிட்டவை தங்களது சார்பில் தலா நான்கு பெயர்களை பரிந்துரைக்கும். இந்த நாடுகளின் பெயர்கள் ஆங்கில அகர முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்திய புயலின் பெயர் மறுமுறை பயன்படுத்தப்படாது.
13 நாடுகள் அளிக்கும் பெயர்கள் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தப்படும். அந்த வகையில், தற்போது தாய்லாந்து அளித்திருக்கும் மொந்தா என்ற பெயர் பட்டியலின் இரண்டாவது வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.
தற்போது வங்கக் கடலில் உருவாகும் இந்த புயல் ஆந்திரம் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்றும். அக். 27ஆம் தேதி புயலாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The first storm of the northeast monsoon has been named MONTHA.
இதையும் படிக்க... வங்கக் கடலில் அக்.27-ல் உருவாகிறது புயல்! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.