

தில்லியில் இன்று வானிலை சாதகமாக அமைந்தால், செயற்கை மழைக்காக மேக விதைப்புச் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க, செயற்கை மழையைப் பொழிய வைக்க மாநில அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. ஜூலை மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட மேக விதைப்பு, தீபாவளிக்கு முன்னதாகவும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் மேக விதைப்புக்கு மாநில அரசு தயாராவதாகத் தெரிகிறது. இருப்பினும், வானிலை சாதகமாக இருந்தால் மட்டுமே, செயற்கை மழைக்குச் சாத்தியம்.
ஏனெனில், மேக விதைப்புக்குப் பொருத்தமான மேகங்கள் இல்லாவிட்டால், மேக விதைப்பு சோதனையும் கிடையாது. ஆரம்பத்தில் ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருந்த இது, பருவமழை, மாறிவரும் வானிலை முறைகள், இடையூறுகள் மற்றும் இப்போது பொருத்தமான மேக மூட்டம் இல்லாததால் தாமதமானது.
தில்லியில் நிலவும் காற்று மாசுபாடு, மக்களின் ஆயுள்காலத்தை 11.9 ஆண்டுகள் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால்தான், செயற்கை மழையை ஏற்படுத்தி காற்று மாசுபாட்டைக் குறைக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தில்லியில் மேக விதைப்புத் திட்டமானது, பாஜக தலைமையிலான மாநில அரசின் ஒரு முக்கிய உறுதிமொழியும்கூட.
இதையும் படிக்க: பெண் விவசாயி குறித்து அவதூறு! நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்ட கங்கனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.