

மோந்தா புயல் தீவிரமடைந்துள்ளதால், ஆந்திரப் பிரதேசத்தின் 3,778 கிராமங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக இன்று (அக். 28) அதிகாலை வலுப்பெற்றதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தீவிரப் புயலான மோந்தா, இன்று மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் கடலோர பகுதிகளான மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் மோந்தா புயலின் தாக்கத்தால், வட தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் மோந்தா புயலின் தாக்கம் அதிகரித்து, ஆந்திரத்தின் 338 மண்டலங்கள் மற்றும் 3,778 கிராமங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக, ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மோந்தா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரத்தின் 22 மாவட்டங்களில்; 3,174 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்படியாக கோணசீமா மாவட்டத்தில் 650 முகாம்களும், பாபட்லாவில் 481 முகாம்களும், கிழக்கு கோதாவரியில் 376 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.