

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய்யின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 23 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூர்ய காந்த்தின் பெயரை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைந்திருந்தார்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்யின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். இதனை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வருகிற நவம்பர் 24 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்கவுள்ளார்.
63 வயதான தலைமை நீதிபதியான சூர்ய காந்த், 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.