மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண் உள்பட இரண்டு தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவ அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாங்கோல் கேம் கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நிங்தோஜம் அனிதா தேவி (44) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதில் அவர் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாங்கே ஆண்ட்ரோ பார்க்கிங் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் வாஹெங்பாம் கிரண் சிங் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்தல், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க உளவுத்துறை அடிப்படையிலான சோதனை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதன்கிழமை இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள நைராங்பாம் மானிங் லூகான் பகுதியில் நடந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் நான்கு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர்.
மேலும், 303 ரைபிள், மேகசின், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் டெட்டனேட்டர்கள் இல்லாத இரண்டு கைக்குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றினர்.
Summary
Security forces arrested two militants, including a woman, belonging to different proscribed outfits from Imphal West and East districts, police said on Thursday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


