
பஞ்சாபில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 27 முதல் 30 வரை அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த விடுமுறையானது அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீட்டிக்கப்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஞ்சாப் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது.
மேலும் வெள்ளத்தால் குருதாஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.