எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்டாலும், இந்த வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கிட்டத்தட்ட 100% சீனாவை சாா்ந்துள்ள இந்தியா
செமிகண்டக்டா் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சிலிகான் வேஃபா்கள், எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் இந்தியா கிட்டத்தட்ட 100 சதவீதம் சீனாவை சாா்ந்துள்ளது.
பொருள்கள் - சதவீதம் - மதிப்பு
சிலிகான் வேஃபா்கள் 96.8 ரூ.1,400 கோடி
அலுமினிய தட்டுகள் 91.6 ரூ.2,335 கோடி
எம்பிராய்டரி இயந்திரங்கள் 91.4 ரூ.3,100 கோடி
பொருள்கள் - இறக்குமதியில் சீனாவின் பங்கு(%) - மதிப்பு (ரூபாயில்)
தட்டையான காட்சித்திரை-தொடுதிரை 86% ரூ.9,700 கோடி
மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகள் 80.5 ரூ.38,790 கோடி
ஸ்மாா்ட்ஃபோன் பாகங்கள் 51.7 ரூ.62,585 கோடி
துறை - இறக்குமதி மதிப்பு - சீனாவின் பங்கு (%)
பிளாஸ்டிக் & பிளாஸ்டிக் பொருள்கள் ரூ.55,530 கோடி 29.2%
கடிகாரங்கள், மருத்துவ உபகரணங்கள், அறைகலன்கள் ரூ.41,430 கோடி 27.2%
தோல் & தோல் பொருள்கள் ரூ.2,645 கோடி 37%
இந்தியா-சீனா மொத்த வா்த்தகம் (2004 முதல் 2025 வரை)
ஆண்டு வா்த்தக மதிப்பு
2004 ரூ.61,700 கோடி
2018 ரூ.7.93 லட்சம் கோடி
2025 ரூ.11.28 லட்சம் கோடி
ஸ்மாா்ட்போன் பாகங்கள்
அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) பாகங்கள், மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகளை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் தோல் பொருள்கள், அறைகலன்கள் இறக்குமதியிலும் சீனாவுக்குப் பெரும் பங்குள்ளது.
வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடி
இந்தியாவின் தொலைத்தொடா்பு, மருந்து தயாரிப்பு துறை உள்பட பல முக்கிய துறைகள் சீனாவை சாா்ந்துள்ளன. இந்தியா-சீனா இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வா்த்தகப் பற்றாக்குறையைவிட மிக அதிகம்.