
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிக உறவு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் பதிவிட்டுள்ளதாவது,
''பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இதில் இரு நாடுகளும் எல்லை தாண்டி தங்கள் கூட்டு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு, பொருளாதாரம், வணிகம் மற்றும் திறமையான உழைப்பு குறித்துப் பேசப்பட்டது. மேலும், உக்ரைனில் நடைபெற்றுவரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாராட்டுகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,
''ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மூலோபாய கூட்டு ஒத்துழைப்பில் இந்தியாவும் ஜெர்மனியும் 25 வது ஆண்டைக் கொண்டாடுகின்றன.
பெரிய ஜனநாயகம் மற்றும் முன்னேற்றப் பாதையிலுள்ள பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இரு நாடுகளும் வணிகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கத்தில் இருதரப்பு பலனை அதிகரிக்கும் பார்வையைக் கொண்டுள்ளன. ஜெர்மனி தலைவர் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.