
ஹிமாசல், பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடவுள்ளார்.
அத்தோடு பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இது தொடர்பான பயண விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஹிமாசலின் காங்ரா பகுதியில், வெள்ள பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரையும் காங்ரா பகுதியில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பின்னர், பிற்பகல் மணியளவில் பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.