குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா வாக்களித்தனர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவது பற்றி...
Sonia Gandhi, Kharge, other Congress leaders cast their votes for 15th Vice Presidential elections
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த கார்கே, சோனியா, பிரியங்கா காந்தி.PTI
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலரும் வாக்களித்துள்ளனர்.

சோனியாவுடன் ராகுல்.
சோனியாவுடன் ராகுல்.PTI

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை எம்.பி.க்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு இன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Summary

Sonia Gandhi, Kharge, other Congress leaders cast their votes for 15th Vice Presidential elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com