இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

உக்ரைன் போரை நிறுத்த ரஷியாவுக்கு அழுத்தும் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
AP
Published on
Updated on
1 min read

ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரை நிறுத்த ரஷியாவுக்கு அழுத்தும் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்ததைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாள்களாக இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் நோ்மறையான கருத்துகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறாா்.

இந்தச் சூழலில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ரஷியாவுக்கு பொருளாதார ரீதியான அழுத்தத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளிடம் அவா் வலியுறுத்தியதாக பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவ்வாறு வரி விதிக்கப்பட்ட பின்னா் அதே நடவடிக்கையை அமெரிக்காவும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவா் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

கடந்த மாதம் அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப்-ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உக்ரைன் போரை நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ரஷியாவின் நட்பு நாடுகளான இந்தியா, சீனா மீது கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு ரஷியாவை போா்நிறுத்தத்துக்கு உடன்பட வைக்க டிரம்ப் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Summary

Trump urges EU to impose 100% tariffs on China, India to pressure Putin, sources say

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com