ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ளதால் குஜராத் மாநில ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு...
Gujarat Governor gets additional charge of Maharashtra
சி.பி. ராதாகிருஷ்ணன் | ஆச்சார்ய தேவவிரத்X
Published on
Updated on
1 min read

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த செப்.9 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவர் 452 வாக்குகளைப் பெற்று குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ளார். அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதையடுத்து குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆச்சார்ய தேவவிரத் முதலில் குஜராத் மாநில ஆளுநராகவும் பின்னர் ஹிமாசலப் பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Gujarat Governor gets additional charge of Maharashtra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com