
பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ. 71,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
இதுதொடர்பாக ஒடிசா முதலவர் மோகன் சரண் மாஜியின் எக்ஸ் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை கண்டு வருகிறது. பிரதமரின் 5 மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்றாகும்.
திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுவது உள்ளடக்கிய விக்சித் பாரத் மீதான உறுதியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
இந்த முயற்சிகள் உள்கட்டமைப்பை அதிகரிக்கும், இணைப்பை வலுப்படுததும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை திறப்பு விழாவுடன் மிசோரம் முதல் முறையாக இந்திய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இது வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று மைல்கல், தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பின் அடையாளமாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா வலிமையானது, ஆத்மநிர்பர் வளமானது என்ற தொலைநோக்குப் பார்வையை நெருங்கிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.