
பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிகோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் மோசமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி, அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“வெளிவட்டச் சாலையில் ஐபிளர் சந்திப்பு அருகில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால், நகர வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது.
இதனால், விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியின் வழியாகக் குறிப்பிட்ட வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்காக, அரசு அதிகாரிகளுடன் இணைந்து விப்ரோ குழுவினர் ஒரு திட்டம் வகுக்க வேண்டும்.
முதற்கட்ட ஆய்வுகளின் மூலம், வெளிவட்டச் சாலைகளின் சந்திப்புகளில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சுமார் 30 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.
பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பெங்களூரு நகரத்தில், வேலை நேரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால், லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.