
கொல்கத்தாவில் நீடிக்கும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, கனமழை, காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்சாரம் பாய்ந்ததிலும் என வெவ்வேறு மின் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஐ கடந்துவிட்டது.
மழை வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மோசமான வானிலை நிலவியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.