
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார்.
சோலப்பூர் மாவட்டத்தின் கர்மலா தாலுகாவில் துணை முதல்வர் அஜித் பவார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
விவசாயிகள் மனம் தளர வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார்.
கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை காரணமாகப் பயிர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள நான் அவர்களுடன் கலந்துரையாடினேன். சேதம் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உடனடி உதவி சென்றடைவதை உறுதிசெய்ய நிர்வாகம் கவனமாகத் திட்டமிட வேண்டும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகக் கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் அரசு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கிறது. இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பவார் கூறினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓவைசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.