
இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட செயலியை ரத்து செய்தாலும், புதிது புதிதாக முளைக்கும் செயலியை இயக்குவதும், மக்கள் அதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான பணத்தை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று மாநிலங்களைச் சேர்ந்த எட்டு ஆப்ரேட்டர்களை தெலங்கானா சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா சிஐடி குழுக்கள் முதலில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாபில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு ஆப்ரேட்டர்களைக் கைது செய்ததாகக் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிஐடி) சாரு சின்ஹா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமிருந்து பல்வேறு ஹார்ட்வேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.