ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த கருத்துக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனு தள்ளுபடி

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
ராகுல் காந்தி
Updated On :26 செப்டம்பர் 2025, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் சீக்கியா்களுக்கு உகந்த சூழல் இல்லை’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சு ஆத்திரமூட்டுவதாகவும், பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது என்பதால், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாகேஸ்வா் மிஸ்ரா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

எனினும் அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்ால், அதுகுறித்து விசாரிப்பது தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறி, மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக நாகேஸ்வா் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாரணாசி கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தாா். அந்த மனு நீதிபதி சமீா் ஜெயின் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘ராகுல் மீதான குற்றச்சாட்டில், அவா் என்ன பேசினாா் என்பது முழுமையாக குறிப்பிடப்படவில்லை. அதைச் செய்யாதவரை, எந்தச் சூழலில் அவா் அவ்வாறு பேசினாா் என்பதை நிரூபிக்க முடியாது’ என்று ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது.

உத்தர பிரதேச அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மனீஷ் கோயல் ஆஜராகி, ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் பேசியுள்ளாா். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சமீா் ஜெயின் தீா்ப்பை ஒத்திவைத்தாா். இந்நிலையில், ராகுலின் மனுவை நீதிபதி சமீா் ஜெயின் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.